Thursday, April 21, 2011

நாம்.........

எல்லைக்குள் கட்டுண்டோம் பெருமையாய் 
சுதந்திர விளம்பிகள்
வேலியிட்டோம் 
நாய் மூத்திரகோடிட்டதுபோல்
'நாடு' என்று பெயரிடவே

எதிரி என்றே கொள்வோம் 
எல்லையை தாண்டி விட்டால் 
கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும்
பரவசமாய் செய்திடுவோம்
ஐந்தடிக்கும் பத்தடிக்குமான சண்டைக்கு 
'போர்' என்று பெயரிட்டு 

முன் 
நான்கு ஊரை வேலி கட்டி
நாடு என்றும் 
ஆண்டவனை
அரசன் என்றும் சொல்லி வந்தோம்
நான்கு இன்று லச்சங்கள்ளானதும்
அதிபர் என்றும் மந்திரி என்றும் ஆன பின்னும்
அண்டை நாட்டை ஆளும் எண்ணம் 
அருகவில்லை 

அடுப்பெரிய  வேண்டி
அடுத்தவனுக்கு குண்டு வைத்தோம் 
உலகமயமாக்கல் என்றே
குருதிமயமாக்கினோம் 


நாம் 
உயர்குலம் என்றே உரைப்பது 
எங்ஙனம்?

2 comments:

  1. உலகமயமாக்கலும் உயர்குலமும் இங்க ஒட்டலையேப்பா...

    ReplyDelete
  2. @முத்து: மனிதன் உயிரினங்கள் அனைத்திலும் தானே உயர்ந்தவன் என்று சொல்லி கொள்வதை மறுக்கும் பொருட்டு முழு கவிதையிலும் அவன் செய்யும் செயல்களை பற்றி எழுதி இறுதியில் உயர் குலம் எங்கனம் என்று கேட்கிறேன்.

    ReplyDelete