Sunday, May 8, 2011

இலக்கிய விழா: ஒரு சர்ச்சை...



அண்மையில் நடந்த  சுஜாதா விருது  விழாவை பற்றி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அபிலாஷ் என்ற எழுத்தாளர் எழுப்பிய சர்ச்சைக்கு விழாவை நடத்திய  உயிர்மை பதிப்பகத்தின்  உரிமையாளர்  மனுசியபுத்திரன் அதற்க்கு மறுப்பும்  அளித்துள்ளார்  இதை விரிவாக படிக்க கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்.

அதன் சாராம்சம் விருது வழங்கும் மேடையில் பேசியவர்கள் யாரும் விருது பெற்றவரை பற்றியோ அவரின் இலக்கிய பங்களிப்பை பற்றியோ பேசாமல் மற்ற கதைகள் பேசினார்கள்  இதற்க்கு காரணமாக அபிலாஷ் முன் வைப்பது இங்கு மேலைநாட்டைப்  போல் தொழில்முறை விமர்சகர்கள் இல்லை அந்த வேலையை பகுதிநேர வேலையாக செய்வது இன்னொரு எழுத்தாளன், இதை மறுக்கும் மனுஷ்யப்புத்திரனின் வாதம் //நான் சன்ஸ்கிருதி சம்மான் விருது பெற்ற போது விருதுகளை வழங்கி பேசிய விக்ரம் சேத் பொதுவாக இந்திய இலக்கிய சூழல்பற்றித்தான் பேசினாரே தவிர எனக்கு ஏன் விருது கொடுக்கபட்டது என்று அல்ல.// இதில் அவர் மறந்துவிட்ட ஒரு விஷயம் விக்ரம் சேத்க்கு மனுச்யபுத்திரன்னை தெரியுமா என்று  தெரியாது அனால் நிச்சயமாக தமிழ் தெரியாது இதே நிலைதான் மற்ற தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியின் நிலையும் விருதளிக்க வருபவர்கள் கடமைக்கென்றே  வருகிறார்கள் வரும்முன் விருது பெற்ற புத்தகத்தின் மொழியாக்கத்தை மேலோட்டம்மாக  வாசித்துவிட்டு வருகிறார்கள் ஆதலால் தான் அவர்களுக்கு லாவகமாக உள்ள இலக்கிய சூழல் என்ற தலைப்பின் கீழ் சொற்ப்போழிவாற்றிவிட்டு சென்று விடுகிறார்கள், ஆனால் சுஜாதா விழாவில் மேடையேறின அனைவருக்கும் தமிழ் படிக்க தெரியும் அதனால் தான் அபிலாஷ் இந்த போக்கை கண்டித்து பேசுகிறார் அவர் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று சொல்லவில்லை இலக்கியத்திற்கு விருது பெறுபவரின் தொண்டு என்ன? அவருக்கேன் இந்த விருது வழங்க படுகிறது என்ற விளக்கம் அவசியம் என்கிறார் இது நியாயமான வாதம். மேலும் அவர்  சாரு  மற்றும்  ஸ்.ரா அவர்களின்  பேச்சு  பற்றி பாராட்டியுமுள்ளார். 

மனுசியப்புத்திரனின் மறுப்பு அபிலாஷ் எதோ வெறுப்பு அல்லது பொறாமையால் எழுதியதது போன்ற பார்வையில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விழாக்களின் மூலம் தான் எழுத்தாளன் அங்கிகாரம் பெற்று பிறக்கிறான் என்று சொல்வதன் மூலம், அவரே தன கருத்தில் முரண்படுகிறார் இதைத்தான் அபிலாஷும் இங்கே வீண் பேச்சுகளை விடுத்து எழுத்தாளரை பற்றி பேசுங்கள் அல்லது இலக்கியம் பற்றி பேசுங்கள் என்று கூறுகிறார். இல்லையேல் சாரு புத்தக வெளியீட்டு விழாவில் மிஷ்கினை அழைத்து வந்ததால் ஏற்பட்ட நிலைதான் வரும். நகைச்சுவை என்பது இலக்கியம் ஒட்டி இருந்தால் அதை யாரும் குறை கூறப்போவதில்லை அல்லது பேச்சின் இடையே கலந்துவிட்டால் எந்த தொந்தரவும் இல்லை அதுவே சம்பந்தம் இல்லாமல் பேசும் பொழுதுதான் விமர்சனதிர்க்குள்ளாகிறது. செம்மொழிக்கு மாநாடு என்று சொல்லிவிட்டு கலைஞரை பற்றி கவிபாடியதை நியாப்படுத்துவதும் இதை நியாப்படுத்துவதும் ஒன்றே. 

அபிலஷின் ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை அது சுஜாதாவை காம்ப்ளியுடன் ஒப்பிடுதல் தமிழிலக்கியத்தில் காம்ப்ளி போன்றவர்கள் என்றால் அது ராஜேஷ்குமார் சுபா போன்றவர்களை கூறலாம் ஏன்னெனில் சுஜாதா இலக்கியத்திற்கு ஆற்றிய பெரும்  தொண்டு மறுப்பதற்கில்லை, அவர் நினைத்திருந்தால் சினிமா கிசுகிசு அல்லது சினிமா தொடர்பான செய்திகளை கொடுத்திருக்கலாம் அவருக்கு இருந்த சினிமாத்துறை பழக்கதைக்கொண்டு அது அவருக்கு மிகப்பெரிய வாசக வட்டத்தை தந்திருக்கும் மாறாக அவர் உலக இலக்கியத்தில் தனக்கு தெரிந்தவைகளை தமிழ் மக்கள் அறியும் வண்ணம் கதைகளாகவோ கட்டுரைகளாகவோ  எழுதி வந்தார் மேலும் புதிய புதிய எழுத்தாளர்கள் பற்றி மக்களுக்கு அறிமுகம் செய்து வந்தார் அதனாலே  பலர் தாங்கள் எழுதிய புத்தகங்களை சுஜாதாவின் பார்வைக்கு அனுப்பினர். சுஜாதாவின் எழுத்து எந்த காலத்திலும் ஒரு தேக்க நிலை காணவில்லை எனலாம் அவர் எழுதிய எழுத்துகளில் சில  அபத்தங்களாக இருந்தாலும் அவரின் கட்டுரைகள் காலப்போக்கிற்கு ஏற்றார்போல் கருத்துக்களை முன் வைத்தது, அவரை பின்பற்றி தமிழில் யாரும் அறிவியல்புனைவுகளில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தியதில்லை அறிவியல்புனைவுகளில் சுஜாதாவின் பங்கு வியக்கத்தக்கது.  சுஜாதா இலக்கியத்தின் காம்ப்ளியுமல்ல சச்சினுமல்ல கங்குலி. ஆனால் கங்குலியின் இறுதிக்கால நிலையை முன்வைத்து யாரும் சுஜாதாவை கங்குலியுடன் ஒப்பிட்டதை மறுத்து வாதிக்க முன் வர வேண்டாம்.


இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் உயிர்மையின் தொண்டு தொடர வேண்டும் அங்கீகாரம் என்பது ஒவ்வொரு  எழுத்தாளனக்கும்  ஊக்கத்தை தந்து அவனை மேலும் எழுத உந்துகிறது சுஜாதா 'கற்றதும் பெற்றதும் ' மூலம் செய்ததை உயிர்மை அவரின் பெயரால் ஒரு விருதை வழங்கி செய்து வருவது சாலப் பொருத்தமாகும். 

சர்ச்சை இன்றி  எந்த ஒரு விழாவும் நடந்தால் அது இலக்கியத்திற்கு அழகில்லை !

No comments:

Post a Comment