கொஞ்சி கொஞ்சிப் பேசினாய்
அழகாய் இருந்தது
குழந்தைப் போல் சேட்டைகள் செய்தாய்
குதூகலித்த மனம்
உன் பின்னாலே சுழன்றது
உன்
சிணுங்கல் சங்கீதமாயானது
ஒரு நாள்
உன்னை காணாமல் வந்த வலி சொன்னது
உன் மீது என் காதலை
காதல் உணர்ந்தபின்
கவலை தொற்றியது
பொய்யாய் உன்னை ரசித்தேன்
கள்ளமரியா என் நெஞ்சம்
கண்கள் கண்டே பேசும்
இன்றோ
பருவ மேடுகளில் மேய்கிறது
நீ காணாத பொழுது
என் காதல் கொன்று
மீண்டும் ரசிகனாய் மாற எண்ணினேன்
காமம் மேலெழுந்து
காதலையும் கொன்றதடி
காதலும் செத்து
காதலனும் செத்து
ரசிகனும் செத்து
காமமாய் நிற்கிறேன்
மிருகமாய் மாறும் முன்
உன் நிழல் படா தூரம்
காண விழைகிறேன்!
நினைவுகளில் புதைந்துவிடுவாய்
என்றே ஓடினேன்
காணும் பெண்ணிளெல்லாம்
உன்னை கண்டு
மீண்டும் காதல் பூத்து நிற்கிறேன் ......
கவிதை நன்றாக இருக்கிறது . வார்த்தை முகமூடிகள் வேண்டாம் ,கட்டுடைத்து எழுது .....இன்னும் நேர்மையாக ,உண்மையாக இருக்கும் .....உதாரணமாக பருவமேடுகள் என்று பூசிமெழுகாமல் முலைகள் என்று பளிச்சென்று எழுது .........இன்னும் காதல் தாண்டி நிறைய எழுது .......வரவேற்கிறோம் .
ReplyDeleteகாதல் - காமம் வேறுபாடு கூறமுடியுமா நண்பா
"கல்ல"மரியா என் நெஞ்சம் ?????
ReplyDelete"கள்ள" அல்லவா?
நல்ல முயற்சி ..வாழ்த்துக்கள்
@நாகா: அச்சு பிழை திருத்தும் செய்யப்பட்டுவிட்டது
ReplyDelete