Sunday, March 17, 2019

                                                    22 July      



இந்த வாரம் நியூ ஸிலாந்தில் ஒரு வெள்ளை இனவெறியன் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். இன்றைக்கு Netflixல 22July என்ற படம் எதேர்ச்சியா பார்த்தேன். இப்படம் ஜூலை 22 2011ல் நார்வே நாட்டில் ஒருவன் நடத்திய  படுகொலை பற்றிய படம், அவன் 71 பேர் கொன்று குவித்தான் அதில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்கள். கொலையாளி தன்  செயலுக்கு சொல்லும் நியாயம் இந்த நாட்டில் வந்தேறிகளின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது போன்ற தீவிர வலதுசாரி சிந்தனைகள். இந்த வாரம் நடந்த தாக்குதலிலும் இஸ்லாமியர்களின்  மீது இதே விமர்சனம் வைக்கப்பட்து கொலையாளியால், அதே சமயம் அதை நியாயப்படுத்தி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் செனட்டர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிடுகிறார். உலகம் முழுதும் தீவிர வலதுசாரிகளின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நன்கு படித்தவர்கள் தான் இச்சித்தாந்தத்தின் பின்னால் செல்கின்றனர், தீவிர இடதுசாரிகள் போல.

படத்தில் ஒஸ்லோவில் வெடிகுண்டு வெடித்த தகவல் மாணவர்களுக்கு சொல்லப்படுத்தும் போது  ஒரு மாணவன் கேட்கிறான் 'அல் கொய்தாவா' என்று உலகம் முழுதும் இப்படி தான் இஸ்லாமியர்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு பொதுப்புத்தி ஆக்கப்பட்டுள்ளது நோர்வே தாக்குதலுக்கு காரணமானவன் வெடி குண்டுக்காக அதிகப்படியாக உரம் மற்றும் சில வேதிய பொருட்கள் வாங்கிய  தகவல் இருந்தும் அவனை காவல்துறை கண்டுகொள்ளவில்லை இதற்கு அந்நாட்டின் காவல் அதிகாரிகள் கூறிய காரணம் இஸ்லாமியர்கள் மீது தான் நமது கவனம் இருந்தது இவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே. அபத்தத்தின் உச்சம் அச்செயல்.

 படம் மிகநேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. வறண்ட கதையை 2 மணிநேரம் சொல்ல தனித்திறமை வேண்டும்பாடல்கள் நடனங்கள் போன்ற நிரப்பிகள் இல்லாமல் அதை செவ்வனே செய்துள்ளார் இயக்குனர். இனவெறியனின் வக்கீலாக  ஒருவர் இருப்பார் படம் பார்ப்பவருக்கே கோவம் வரும் வண்ணம் பொறுப்பாக அந்த வழக்கை வாதிடுவார் அதனால் அவருக்கு பல அச்சுறுத்தலும் அவர் குழந்தையை பள்ளியில் இருந்தும் நீக்குவார்கள்  அவர் அதை சட்டை செய்யாமல் கடமையுணர்ச்சியுடன் வாதிடுவார். ஒரு இடத்தில் அவன் வழக்கறிஞரிடம் உங்களுக்கு எதனை குழந்தைகள் அவர்களுக்கு வலிக்கும் இடத்தில்  அடிக்க வேண்டும் என்றும் சொல்லுவான் மனிதர் அதன் பின்னும் அவனுக்காக வாதிடுவார் இறுதியில் அவனுக்கு தனிச்சிறை வழங்கி தீர்ப்பு கொடுத்தப்பின்னர் அவன் கைகொடுப்பான் அப்பொழுது தான் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவார். அவசியம் பார்க்க வேண்டிய படம் இன, மத, ஜாதிய பிரிவினைவாதிகளுக்கு ஒவ்வாத படம்.

எல்லோரும் தொன்றுதொட்டே அகதிகளாக ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு போய்க்கொண்டு தான் இருக்கிறோம் மனிதன் ஒரே இடத்தில பிறந்து ஒரே இடத்தில மறிப்பதில்லை ஆனால் இதை உணராமல் ஏதோ  ஒரு பொதுக்காரணியைக்கொண்டு ஒரு சிலர் தங்களை இணைத்துக்கொண்டு மற்றவர்களை வெறுக்க ஆரம்பித்தால் இறுதிவரை வெறுப்பு மட்டுமே எஞ்சும்.