Thursday, February 9, 2012


தவழும் வயதில் நடக்க ஆசை
நடக்கும் போது ஓட ஆசை
பருவ வயதில் பெண் மீது ஆசை
வீரியம்  குன்றும் வரை கலவி மீது ஆசை
நாளெல்லாம் ஆயிரம் ஆசை
ஆசை அருகியதும்
மரணம் மீது ஆசை
ஆசையற்று போகுமோ 
என்று 
ஆசை மீது பேராசை